இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளார்.
கயானாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். குரூப் ஏ சுற்று முதல் சூப்பர் 8 சுற்று வரையில் விளையாடிய 6 போட்டியிலும் விராட் கோலி வரிசையாக 1, 4, 0, 24, 37, 0 என்று ஒட்டு மொத்தமாக 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
undefined
இந்த நிலையில் தற்போது கயானாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், விளையாடிய விராட் கோலி 6 பந்துக்கு ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் 7ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். 8ஆவது பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் 9ஆவது பந்தில் கிளீன் போல்டானார். இந்தப் போட்டியில் அவர் 9 பந்துகளில் 9 ரன் எடுத்து வெளியேறினார்.
இதன் மூலமாக இந்த தொடரில் கோலி 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி 50 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்னதாக,
72*(44) vs தென் ஆப்பிரிக்கா, 2014
89*(47) vs வெஸ்ட் இண்டீஸ், 2016
50(40) vs இங்கிலாந்து, 2022
9(9) vs இங்கிலாந்து, 2024
என்று டீசண்டான ஸ்கோர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.