உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது யாரும் பார்த்திராத விராட் கோலியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில் இந்தியா லீக் போட்டியில் மற்ற எல்லா அணிகளையும் வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஹோம் மைதானத்தை மாற்றிய பஞ்சாப் கிங்ஸ் – ஹர்ஷல் படேலுக்கு ஸ்கெட்ச் போட்டது சரிதானோ?
முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 327 ரன்கள் குவித்து 70 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், உலகக் கோப்பையில் 4 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஷமி அசத்தியுள்ளார்.
Lionel Messi Jersey Number 10: லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அறிவித்த அர்ஜென்டினா!
இதையடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து கொடுத்து ஆஸி.,யை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது.
ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் அணியில் இடம் பெற வேண்டும் – இர்பான் பதான்!
இந்த உலகக் கோப்பை இந்தியா மற்றும் இந்திய அணி வீரர்களும் பல சாதனைகளை படைத்தனர். இந்தியா விளையாடிய 9 லீக் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. அரையிறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. ஆனால், இறுதிப் போட்டியில் தோல்வி தான் மிஞ்சியது.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை விராட் கோலி 50 ஆவது சதம் அடித்து முறியடித்தார். அணியில் மட்டுமே இடம் பெற்றிருந்த முகமது ஷமிக்கு, ஹர்திக் பாண்டியா காயமடைய பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷமி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (24) எடுத்த வீரர் என்ற சாதனையோடு முடித்தார்.
இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலியா வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது விராட் கோலி தனது தொப்பியால் ஸ்டெம்பின் பெயில்ஸை தட்டிவிட்டார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
UNSEEN VIDEO OF KOHLI 💔 pic.twitter.com/o4ZkZhf3zh
— cricket videos (@RizwanStum60450)