India vs South Africa: சிராஜுக்கு பதிலா அவரை சேர்க்காமல் இவரை சேர்த்தது ஏன்? மழுப்பாம ஓபனா பேசிய கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jan 11, 2022, 2:49 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் காயத்தால் ஆடாத முகமது சிராஜுக்கு பதிலாக சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவை சேர்க்காமல், உமேஷ் யாதவை ஆடவைத்தது ஏன் என கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என டெஸ்ட் தொடர் சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2வது டெஸ்ட்டில் காயத்தால் ஆடாத கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியில் ஆடுவதால் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2வது டெஸ்ட்டின்போது காயமடைந்த ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் இந்த டெஸ்ட்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா சேர்க்கப்படாமல், உமேஷ் யாதவை ஆடும் லெவனில் சேர்த்தது ஏன் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டாஸ் போடும்போது இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, சிராஜுக்கு காயம் என்பதால் அவர் ஆடவில்லை. சிராஜுக்கு பதிலாக உமேஷ் யாதவ் ஆடுகிறார். உமேஷ் யாதவ் நெட்டில் அருமையாக பந்துவீசினார். ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்யக்கூடியவர்;  பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார். இஷாந்த் - உமேஷ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினமானதுதான். உமேஷ் ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கிலும் நன்றாக செயல்படுவார் என்பதாலும், நெட்டில் சிறப்பாக வீசியதாலும்தான் அவர் எடுக்கப்பட்டார் என்று கோலி தெரிவித்தார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!