India vs South Africa: வரலாறு படைக்குமா இந்தியா..? 3வது டெஸ்ட் டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Jan 11, 2022, 1:58 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியும், 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 

கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட். இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி ஒன்றரை மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

காயம் காரணமாக 2வது டெஸ்ட்டில் ஆடிராத கேப்டன் விராட் கோலி, இந்த டெஸ்ட்டில் ஆடுகிறார். அதனால் அவருக்கு பதிலாக 2வது டெஸ்ட்டில் ஆடிய ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார். 

2வது டெஸ்ட்டில் பந்துவீசும்போது காயமடைந்த முகமது சிராஜ் 3வது டெஸ்ட்டில் ஆடவில்லை. எனவே அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மாவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உமேஷ் யாதவ் கடந்த 2-3 நாட்களாக வலைப்பயிற்சியில் நன்றாக பந்துவீசியதால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா.
 
தென்னாப்பிரிக்க அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன் வாண்டர் டசன், டெம்பா பவுமா, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், கேஷவ் மஹராஜ், ஆலிவியர், லுங்கி இங்கிடி, ககிசோ ரபாடா.
 

click me!