இப்போதைக்கு பாபர் அசாம் தான் டாப் பேட்ஸ்மேன் என்று விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் தலைசிறந்த வீரர்களாக அறியப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் பாபர் அசாமும் அண்மையில் இணைந்தார்.
பாபர் அசாமின் தேர்ந்த பேட்டிங் டெக்னிக், தெளிவான பேட்டிங் என பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு ஸ்கோர் செய்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.
ஒரு காலத்தில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கோலியின் சாதனை உட்பட பழைய பேட்டிங் சாதனைகளை எல்லாம் தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார் பாபர் அசாம்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலா அந்த பையனைத்தான் எடுத்திருக்கணும்! பாக்.,முன்னாள் வீரர் பளீச்
42 டெஸ்ட், 92 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் முறையே, 3122, 4664 மற்றும் 2686 ரன்களை குவித்துள்ளார் பாபர் அசாம். விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் நடந்துவருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலர் பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று கூறினாலும், வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள், இவ்வளவு விரைவில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடக்கூடாது என்று நியாயமாக கூறுகின்றனர்.
இந்நிலையில், யாருடன் பாபர் அசாமை ஒப்பிடுகிறார்களோ, அந்த விராட் கோலியே பாபர் அசாம் தான் இப்போதைக்கு டாப் பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை: கோலிக்கு கட்டம் கட்டிய ரோஹித்.. வேதனையின் வெளிப்பாடா கோலியின் டுவீட்..?
இதுகுறித்து பேசிய விராட் கோலி, அனைத்து ஃபார்மட்டுகளிலும் இப்போதைக்கு பாபர் அசாம் தான் டாப் பேட்ஸ்மேன். பாபர் அசாம் பேட்டிங் ஆடுவதை ஆட எனக்கு ரொம்ப பிடிக்கும். 2019 ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் தான் பாபர் அசாமை முதல் முறையாக சந்தித்து பேசினேன். இருவரும் நீண்டநேரம் அமர்ந்து பேசினோம். மிகவும் நல்ல குணம் வாய்ந்த வீரர் பாபர் அசாம். அவர் ஒரு கிரிக்கெட்டராக இன்னும் நீண்டகாலம் நீண்டதூரம் பயணிக்க வேண்டும் என்று விராட் கோலி புகழாரம் சூட்டினார்.