கங்குலியின் இடத்தை காலி செய்து அந்த இடத்தில் உட்காரப்போகும் கோலி

By karthikeyan VFirst Published Feb 20, 2020, 3:34 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் கங்குலியின் சாதனையை முறியடித்து, அவரது இடத்தை பிடிக்கவுள்ளார் கோலி. 
 

இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, இதற்கு முன் செய்யப்பட்ட பல பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து மூன்றாமிடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துவிடுவார். 

அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை எல்லாம் கோலி முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துவருகிறார். பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாகவும் வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்து இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதனைகளை படைத்துவரும் விராட் கோலி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கங்குலியின் சாதனையை முறியடித்து அவரது இடத்தை பிடிக்கவுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(15921 ரன்கள்) , ராகுல் டிராவிட்(13265), கவாஸ்கர்(10122), விவிஎஸ் லட்சுமணன்(8781), சேவாக்(8503) ஆகிய ஐவரும் முதல் 5 இடங்களில் உள்ளனர். 

Also Read - 1992 உலக கோப்பையில் இம்ரான் கானோட பங்களிப்பு பூஜ்ஜியம்.. புள்ளி விவரத்துடன் இம்ரானை தாறுமாறா கிழித்த ரசிகர்

இவர்களுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் கங்குலி இருக்கிறார். கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7212 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி 7202 ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். எனவே இன்னும் 11 ரன்கள் மட்டும் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத்தள்ளி ஆறாமிடத்தை பிடித்துவிடுவார். இந்த 11 ரன்களை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே கோலி அடித்துவிடுவார் என்பதால், அடுத்த போட்டியிலேயே கங்குலியின் இடத்தை பிடித்துவிடுவார். 

click me!