அனுபவமான மிரட்டல் வீரர் கம்பேக்.. முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி

By karthikeyan VFirst Published Feb 20, 2020, 2:17 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் உத்தேச நியூசிலாந்து அணியை பார்ப்போம். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முறையே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வென்றன. இரண்டு தொடர்களும் முடிந்த நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகள், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், 2 அணிகளுமே இதில் வெல்லும் தீவிரத்தில் உள்ளன. 

முதல் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்குகிறது. இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்திய அணியில் விராட் கோலி, புஜாரா, ரஹானே, அஷ்வின், பும்ரா, ஷமி ஆகிய அனுபவ வீரர்கள் உள்ளனர். அதேபோல நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், டெய்லர், டிரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகிய அனுபவ வீரர்கள். இரு அணிகளுமே சிறந்த மற்றும் அனுபவ வீரர்களை பெற்றுள்ளது. 

அதுவும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும். நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

நியூசிலாந்து அணியில் களமிறங்கும் உத்தேச வீரர்களை பார்ப்போம். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் இறங்குவார்கள். அடுத்தடுத்த வரிசைகளில் வில்லியம்சன், டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோரும் விக்கெட் கீப்பர் வாட்லிங்கும் இறங்குவார்கள். ஆல் ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோம், ஸ்பின் பவுலர் அஜாஸ் படேல் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்களாக டிரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகிய இரண்டு அனுபவஸ்தர்களுடன் கைல் ஜாமிசன் அணியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. 

காயத்திலிருந்து மீண்டு டிரெண்ட் போல்ட் அணியில் இணைந்திருப்பது நியூசிலாந்து அணிக்கு பலம். அதேபோல வளர்ந்த வீரரான ஜாமிசனும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நியூசிலாந்து அணி நிர்வாகம் நம்புகிறது. 

Also Read - நான் எதிர்கொ1992 உலக கோப்பையில் இம்ரான் கானோட பங்களிப்பு பூஜ்ஜியம்.. புள்ளி விவரத்துடன் இம்ரானை தாறுமாறா கிழித்த ரசிகர்

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டாம் பிளண்டெல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், பிஜே வாட்லிங்(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், அஜாஸ் படேல்,  டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன். 
 

click me!