ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 3002 ரன்கள் குவித்து விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக ஆரம்பித்தனர்.
இதில், ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் 67 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 3002 ரன்கள் கடந்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலியைத் தொடர்ந்து ரோகித் சர்மா 69 இன்னிங்ஸ் விளையாடி 2637 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 68 இன்னிங்ஸ் விளையாடி 2502 ரன்கள் எடுத்து 3ஆவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 44 இன்னிங்ஸ் விளையாடி 2278 ரன்கள் எடுத்து 4ஆவது இடத்திலும், குமார் சங்கக்காரா 65 இன்னிங்ஸ் விளையாடி 2193 ரன்கள் எடுத்து 5ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.