இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டியில் தற்போது ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஸ்கின் அகமது நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜாக்கெர் அலி அணியில் இடம் பெற்றுள்ளார்.
வங்கதேசம்:
தன்ஷித் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹூசைன், மஹெதி ஹசன், தன்ஷிம் ஹசன் ஷாகிப், முஷ்தாபிஜூர் ரஹ்மான்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 13 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 12 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.