Latest Videos

கனடா போக சொன்ன அப்பா – ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட அனுமதி கேட்ட வேகப்பந்து வீச்சாளர் யார் தெரியுமா?

By Rsiva kumarFirst Published Jun 22, 2024, 1:10 PM IST
Highlights

கனடா படிக்க போ என்று அப்பா சொல்லவே ஒரு வருடம் மட்டும் கிரிக்கெட் விளையாடிக் கொள்கிறேன் என்று அனுமதி கேட்டு இன்று இந்திய அணியில் கலக்கி வருபவர் தான் கிரிக்கெட் வீரர் தான் அர்ஷ்தீப் சிங்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இந்தியா அண்டர்19, பஞ்சாப், பஞ்சாப் கிங்ஸ், இந்தியா அண்டர்23 போட்டிகளில் விளையாடியுள்ளார். படிப்பிற்காக கனடா செல்ல அவரது தந்தை அறிவுறுத்திய நிலையில், ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தந்தையிடம் அனுமதி கோரி அதன் பிறகு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் குணா என்ற ஊரில் பிறந்துள்ளார். இவரது தந்தை தர்ஷன் சிங். இவர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். தாய் பால்ஜித் கவுர். சகோதரர் ஆகாஷ்தீப் சிங். சகோதரி குர்லீன் கவுர். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார்.

இதே போன்று 2022 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். ஐபிஎல் தொடர் முலமாக ஆண்டுக்கு ரூ.4 கோடி வரையில் வருமானம் ஈட்டும் அர்ஷ்தீப் சிங்கின் மொத்த சொத்த மதிப்பு மட்டும் ரூ.9 கோடி ஆகும்.

ரஞ்சி டிராபி தொடர் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், விஜய் ஹசாரே டிராபி மூலமாக ரூ.25 ஆயிரமும் (நாள் ஒன்றுக்கு), சையத் முஷ்டாக் அலி டிராபி மூலமாக ரூ.17,500 (நாள் ஒன்றுக்கு) வீதம் வருமானம் பெறுகிறார். பிசிசிஐ சி கிரேடு ஒப்பந்தம் மூலமாக ரூ.1 கோடி வரையில் சம்பளமாக பெறுகிறார். மை11சர்க்கிள், மை ஃபிட்னஸ், ஆசிக்ஸ் இந்தியா (ASICS India), சண்டிகர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு பிராண்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சண்டிகரில் அர்ஷ்தீப் மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட வீட்டை வைத்திருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும் போது இந்த வீடு நவீன முறையில் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த வீட்டில் தான் அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆனால், வீட்டின் மதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. அர்ஷ்தீப் சிங்கிடம் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது. இது தவிர ஒரு ஃபெராரி, லம்போர்கினி மற்றும் ஒரு தனியார் ஜெட் விமானத்தையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!