முகமது ஷமி – சானியா மிர்சா திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா தந்தை!

By Rsiva kumar  |  First Published Jun 22, 2024, 9:19 AM IST

முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மறுப்பு தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஹசின் ஜஹான், முகமது ஷமி மிது அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்துள்ளார். அவர் மீது வழக்குகளும் பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதே போன்று இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரருமான சோயிப் மாலிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். சோயப் மாலிக் 3ஆவது திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததைத் தொடர்ந்து சானியா மிர்சா இந்த விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

சோயப் மாலிக் விவாகரத்து பெற்ற பிறகு பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு, இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், அது சோயப் மாலிக் மற்றும் சனியா மிர்சாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அதில், சோயப் மாலிக்கின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஷமியின் புகைப்படத்தை மாற்றி வைத்து சில விஷமிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இது குறித்து பேசிய சானியா மிர்சாவின் தந்தை கூறியிருப்பதாவது: முற்றிலும் இது வதந்தி தான். இதுவரையில் சானியா மிர்சா, முகமது ஷமியை பார்த்தது கூட இல்லை. சானியா மிர்சா தற்போது தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர்ந்து முகமது ஷமி காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வருகிறார்.

click me!