இந்திய அணியின் பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் – கம்பீரின் கட்டுப்பாடுகளால் மாற்றப்பட்ட பயிற்சியாளர்?

By Rsiva kumarFirst Published Jun 21, 2024, 3:52 PM IST
Highlights

இந்திய அணி விளையாடும் அடுத்த தொடருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்று சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சுற்றில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 22 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொடரைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடையும் நிலையில் அடுத்து கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கான நேர்காணலும் நடைபெற்றுள்ளது.

Latest Videos

இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருடன் கவுதம் காம்பீர் தனது பணியை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், கவுதம் காம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. கவுதம் காம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு என்று மூன்று அணிகளை உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இளம் வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கின்றனர். அவர்களுக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

click me!