இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதில், நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரைத் தொடர்ந்து நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்:
நவம்பர் – 08: இந்தியா – தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 – இரவு 9.30 மணி
நவம்பர் – 10: இந்தியா – தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - இரவு 9.30 மணி
நவம்பர் – 13: இந்தியா – தென் ஆப்பிரிக்கா, 3ஆவது டி20 - இரவு 9.30 மணி
நவம்பர் – 15: இந்தியா – தென் ஆப்பிரிக்கா, 4ஆவது டி20 - இரவு 9.30 மணி