தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கோலி ஆடுவாரா..? கேப்டன் கோலியின் உடற்தகுதி குறித்த அப்டேட்

By karthikeyan VFirst Published Jun 3, 2019, 11:44 AM IST
Highlights

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் வலுவாக இருப்பதால், உலக கோப்பை தொடரில் அவர்களது பங்களிப்பு தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அல்லது இந்தியா தான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் வலுவாக இருப்பதால், உலக கோப்பை தொடரில் அவர்களது பங்களிப்பு மிக மிக அவசியம். இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரருமான விராட் கோலி, இந்திய அணியில் முக்கிய பங்காற்றுவார். அவரை இந்திய அணி பெரியளவில் சார்ந்திருக்கிறது. 

சர்வதேச போட்டிகளில் ரன்களை குவிக்கும் ரன் மெஷினாக திகழ்கிறார் கோலி. இந்திய அணி வரும் 5ம் தேதி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதற்காக சவுத்தாம்ப்டனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஃபிசியோ பாட்ரிக் சிகிச்சை அளித்தார். அதன்பின்னர் கோலி மைதானத்திலிருந்து கிளம்பி ஓய்வு எடுக்க சென்றுவிட்டார். 

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் கோலியின் பங்களிப்பு உலக கோப்பையில் அவசியம். கோலி தான் பெரும்பாலும் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கிறார். எனவே அவர் ஆடுவது அவசியம். இதற்கிடையே அவர் காயமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கோலியின் காயம் சரியாகிவிட்டதாகவும் அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கோலி ஆடுவது உறுதியாகிவிட்டது. 
 

click me!