ஷேன் வார்னேவின் கனவு உலக கோப்பை அணி.. ஒரே ஒரு இந்திய வீரருக்குத்தான் இடம்

By karthikeyan VFirst Published Jun 3, 2019, 10:43 AM IST
Highlights

உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஷேன் வார்னே தனது கனவு உலக கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியும் ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு வெகுண்டெழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணியின் மீதும் அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த பேட்டிங் ஆர்டரை பெற்றிருப்பதுடன் பவுலிங்கும் நன்றாக உள்ளது. இந்த உலக கோப்பையில் விராட் கோலி, தோனி, பட்லர், பேர்ஸ்டோ, வார்னர், ஸ்மித், வில்லியம்சன், ரோஹித் சர்மா என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர். விராட் கோலி, தோனி, ஸ்மித், வார்னர் ஆகியோரெல்லாம் சிறந்த வீரர்கள் என்று இந்த தலைமுறை ரசிகர்கள் தூக்கிவைத்து கொண்டாடும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது கனவு அணியில் இவர்கள் யாரையுமே தேர்வு செய்யவில்லை. 

உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஷேன் வார்னே தனது கனவு உலக கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் வார்னே தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக, ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த ரிக்கி பாண்டிங்கையும் நான்காம் வரிசையில் லெஜண்ட் பிரயன் லாராவையும் தேர்வு செய்துள்ளார்.

 

ஐந்தாம் வரிசைக்கு மார்க் வாகையும் விக்கெட் கீப்பராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கராவையும் வார்னே தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் மற்றும் அஃப்ரிடியை தேர்வு செய்துள்ள வார்னே, ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் மற்றும் மெக்ராத்தை தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலராக முரளிதரனை தேர்வு செய்துள்ளார். 

ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள அனைத்து வீரர்களுமே 90கள் மற்றும் 2000ம்களின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். இந்த தலைமுறை வீரர்கள் ஒருவரைக்கூட வார்னே தேர்வு செய்யவில்லை. 

ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள கனவு உலக கோப்பை அணி:

1. ஆடம் கில்கிறிஸ்ட்


2. சச்சின் டெண்டுல்கர்


3. ரிக்கி பாண்டிங்


4. பிரயன் லாரா


5. மார்க் வாக்


6. குமார் சங்கக்கரா


7. ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப்


8. ஷாகித் அஃப்ரிடி


9. வாசிம் அக்ரம்


10. முத்தையா முரளிதரன்


11. கிளென் மெக்ராத்

click me!