ஏன் அவர எடுத்தோம்னு இப்போ தெரியுதா..? ரோஹித் ஆதரவாளர்களை அட்டாக் செய்த கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Sep 3, 2019, 11:23 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மீண்டும் எடுக்கப்பட்ட போதிலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று, இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மீண்டும் எடுக்கப்பட்ட போதிலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். உலக கோப்பையில் அபாரமாக ஆடி நல்ல ஃபார்மில் இருப்பதால், ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு இரண்டு போட்டிகளிலுமே வாய்ப்பளிக்கப்படவில்லை. 

ரோஹித் - விஹாரி இருவரில் யார் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஹனுமா விஹாரிக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. இதுவரை கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் நன்றாக ஆடிய ஹனுமா விஹாரி மீது நம்பிக்கை வைத்து அவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் பவுலிங்கும் வீசுவார் என்பதால் அவருக்கு முன்னுரிமை கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட ஹனுமா விஹாரி, தனக்கான இடத்தை வலுவாக உறுதி செய்துவிட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரை அணியில் எடுத்ததற்கு அவர் ஏமாற்றவில்லை. மொத்தமாக 2 போட்டிகளிலும் சேர்த்து அவர் ஆடிய நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதம் அடித்தார். இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் விஹாரி தேர்வு செய்யப்பட்டார். 

இனிமேல் ரோஹித் டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படியே சேர்க்கப்பட்டாலும், கிடைக்கும் வாய்ப்பை கண்டிப்பாக ரோஹித் சிறப்பாக பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. மிடில் ஆர்டரில் இல்லாவிட்டாலும், கங்குலி சொன்னதுபோல ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக முயற்சி செய்யலாம். ஆனால் இதுதொடர்பாக அணி நிர்வாகம் என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ரோஹித்தை அணியில் எடுக்காததற்கு பல முன்னாள் ஜாம்பவான்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால் அவருக்கு பதிலாக எடுக்கப்பட்ட ஹனுமா விஹாரி அசத்தலாக ஆடிய நிலையில், விஹாரி அவரது தேர்விற்கு அர்த்தம் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றபிறகு பேசிய கேப்டன் கோலி, ஹனுமா விஹாரி அபாரமாக ஆடினார். அணிக்கு அவர் அளித்த பங்களிப்பு அபாரமானது. இந்த ஆடுகளத்தில் விஹாரி இந்தளவிற்கு சிறப்பாக பேட்டிங் ஆடியது என்பது அருமையான விஷயம். இதுவொரு டாப் க்ளாஸ் இன்னிங்ஸ். அவரது ஆட்டம் என்னவென்பதை உணர்ந்து அதை சரியாக ஆடினார் ஹனுமா விஹாரி. மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் பேட்டிங் ஆடுகிறார். நிதானம் அவரது இயல்பான குணம். அவர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு அதை திருத்திக்கொள்கிறார். அவர் தனது பேட்டிங் திறனை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார். அவரை ஏன் அணியில் எடுத்தோம் என்பதற்கான காரணத்தை நிரூபித்துவிட்டார் என்று கோலி புகழ்ந்தார். 
 

click me!