தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை தகர்த்தெறிந்த கோலி.. இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக உருவெடுத்த விராட்.. 8 வருஷத்துல எப்பேர்ப்பட்ட வளர்ச்சி

By karthikeyan VFirst Published Sep 3, 2019, 9:54 AM IST
Highlights

விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் கேப்டன்சியில் தலைசிறந்தவராக இல்லை. அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும், நம்பரின் அடிப்படையில் சிறந்த கேப்டனாகவே உள்ளார். 

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற கோலி, 5 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் கேப்டன்சியில் தலைசிறந்தவராக இல்லை. அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும், நம்பரின் அடிப்படையில் சிறந்த கேப்டனாகவே உள்ளார். 

அவரது கேப்டன்சியில்தான் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி பெற்ற 28வது டெஸ்ட் வெற்றி. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணிக்கு 27 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தோனி தான் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார். 

கோலி தலைமையில் இந்திய அணி ஆடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 28ல் வெற்றி பெற்றுள்ளது. 2011ல் வெஸ்ட் இண்டீஸில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஆடிய முதல் போட்டி. 2016ல் வெஸ்ட் இண்டீஸில் அந்த அணிக்கு எதிராகத்தான் தனது முதல் இரட்டை சதத்தையும் கோலி அடித்தார். இப்போது வெஸ்ட் இண்டீஸில் அந்த அணிக்கு எதிராக வென்று, அதிகமான டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

click me!