உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு நியூசிலாந்தை பழிதீர்ப்பீங்களா..? கேப்டன் கோலியின் ரசிக்கவைக்கும் பதில்

By karthikeyan VFirst Published Jan 23, 2020, 1:26 PM IST
Highlights

உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்தை, இந்த தொடரில் இந்திய அணி பழிதீர்க்குமா என்ற கேள்விக்கு அனைவரும் ரசிக்கும் விதமாக, நியூசிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் விதமாகவும் பதிலளித்தார் கேப்டன் விராட் கோலி. 
 

இந்திய அணி, 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துவரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. 

அதேநேரத்தில், டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகமான வெற்றிகளை குவித்து, இந்திய அணியின் மீது டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் நியூசிலாந்து அணி, அந்த ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பர் யார்..? உறுதி செய்து அறிவித்த கேப்டன் கோலி

நாளை முதல் டி20 போட்டி தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் விராட் கோலி. அப்போது, அவரிடம், உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்தை இந்த தொடரில் பழிதீர்ப்பீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கேப்டன் கோலி, கண்டிப்பாக கிடையாது. நியூசிலாந்து வீரர்கள் மிகச்சிறந்தவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. பழிவாங்கும் படலமெல்லாம் இங்கு கிடையாது. நியூசிலாந்து வீரர்களுடன் களத்தில் போட்டி மட்டுமே என்று கோலி தெரிவித்தார். 

கேப்டன் கோலி சொன்னது உண்மைதான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் மோதலென்றால் அது வேற மாதிரி. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்றால், ஸ்லெட்ஜிங், மோதல்கள் என பரபரப்பும், பழிவாங்குவதுமாக இருக்கும். நியூசிலாந்து வீரர்கள் களத்தில் டீசண்ட்டாக ஆடக்கூடியவர்கள். அதனால் அவர்களுடன் இந்திய வீரர்களுக்கு மோதல்களெல்லாம் கிடையாது. நியூசிலாந்து வீரர்கள் எல்லா அணிகளுடனுமே அப்படித்தான் ஆடுவார்கள். 
 

click me!