வில்லியம்சனுக்காக வரிந்துகட்டிய விராட்.. இதை சொல்றதுக்கு முழு தகுதியான ஆளு நம்ம கோலிதான்

By karthikeyan VFirst Published Jan 23, 2020, 12:01 PM IST
Highlights

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குரல் கொடுத்துள்ளார். 
 

இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. 

இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் கோலி. அப்போது, ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து அணி 3-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது குறித்தும் வில்லியம்சனின் கேப்டன்சி குறித்தும் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த கேப்டன் கோலி, முன்பும் சரி, இப்போதும் சரி, எவ்வளவு நல்ல கேப்டனாக இருந்தாலும், அணிக்கு பின்னடைவு என்று வரும்போது கேப்டன் விமர்சிக்கப்படுவது பொதுவானதுதான். அணிக்கு எந்தவிதத்தில் எல்லாம் பங்களிப்பு செய்வது, அணியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்பதில்தான் எனது முழு கவனமும் இருக்கும். எனவே, போட்டியின் முடிவுகளை மட்டும் கேப்டன்சியை தீர்மானிப்பதோ மதிப்பிடுவதோ சரியாக இருக்காது என்பது எனது கருத்து. அணியை ஒருங்கிணைத்து, எப்படி வழிநடத்துகிறோம் என்பதும், நமக்கு கீழ் வீரர்கள் எப்படி ஒத்துழைப்பு கொடுத்து ஆடுகிறார்கள் என்பதும்தான் முக்கியம். அந்த பணியை ஒரு கேப்டனாக கேன் வில்லியம்சன் சிறப்பாக செய்கிறார் என்றே கருதுகிறேன். 

நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன் மீது மதிப்பும்  மரியாதையும் வைத்திருக்கிறார்கள். வில்லியம்சன், வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நியூசிலாந்து அணியிடம் நான் இதைத்தான் பார்த்திருக்கிறேன். அவர் ஸ்மார்ட் கிரிக்கெட்டர். ஒரு அணி தோற்றால், அதற்கு கேப்டன்சி மட்டுமே காரணமல்ல. ஒரு அணியாக அனைவரும் சேர்ந்துதான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். தோல்வி என்பது கேப்டனால் மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்று வில்லியம்சனுக்கு ஆதரவாக விராட் கோலி குரல் கொடுத்துள்ளார். 

அனைத்து வகையான போட்டிகளிலும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல வெற்றி விகிதத்தை கொண்ட கேப்டன் கோலி, இந்த விஷயத்தை சொல்லும்போதுதான், இந்த கருத்துக்கான மதிப்பும் தாக்கமும் அதிகமாக இருக்கும். ஏனெனில் நல்ல வெற்றி விகிதத்தை கொண்ட கேப்டனே, வெற்றி விகிதத்தை மட்டும் வைத்து கேப்டன்சியை மதிப்பிட முடியாது என்று சொல்கிறார் என்றால், அதில் உள்ள உண்மையும் நியாயமும் பொதுவானவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.
 

click me!