இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த 33ஆவது லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்து சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் எடுக்கவே இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பதும் நிசாங்கா 0, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா 0, சரித் அசலங்கா 1, ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்கள் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக குறைவான ஸ்கோர் எடுத்து முத்திரை பதித்த இலங்கை!
இதையடுத்து களமிறங்கிய பின்வரிசை வீரர்களும் துஷான் ஹேமந்தா 0, துஷ்மந்தா சமீரா 0, கசுன் ரஜீதா 14, தில்ஷன் மதுஷங்கா 5 ரன்கள் என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். மஹீஷ் தீக்ஷனா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியாக இலங்கை 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
India vs Sri Lanka: இலங்கை 55 ரன்னுக்கு ஆல் அவுட் – முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா!
இதுவரையில் விளையாடிய 513 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 308 போட்டிகளில் வெற்றி பெற்றி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். இதுவரையில் 463 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி வெற்றி பெற்ற 307 போட்டிகளில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.