பிள்ளையார் சுழி போட்ட பும்ரா, சிராஜ் – பக்காவா முடித்து கொடுத்து சாதனை படைத்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது

By Rsiva kumar  |  First Published Nov 3, 2023, 12:29 AM IST

இலங்கைக்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


இந்தியா – இலங்கை இடையிலான 33ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் விட்ட ஒரு சில கேட்சுகளால் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் அரைசதம் அடித்தனர். கடைசியாக கில் 92 ரன்களும், கோலி 88 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுக்க இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்தது.

முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக குறைவான ஸ்கோர் எடுத்து முத்திரை பதித்த இலங்கை!

Tap to resize

Latest Videos

பின்னர், கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் மிஞ்சியது. தொடக்க வீரர்கள் இருவரையும் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களின் முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்தனர். அதே ஓவரில் சிராஜ் 2ஆவது விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மீண்டும் சிராஜ் தனது 2ஆவது ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது, இலங்கை அணி 3.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்கள் எடுத்திருந்தது. இதில், 2 வைடுகள் அடங்கும். மேலும் இதில் 3 வீரர்கள் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

India vs Sri Lanka: இலங்கை 55 ரன்னுக்கு ஆல் அவுட் – முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா!

இதையடுத்து போட்டியின் 10ஆவது ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரின் 3ஆவது பந்தில் சரித் அசலங்கா விக்கெட்டை கைப்பற்றினார். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டமிழந்ததைப் போன்று இந்தப் போட்டியிலும் சரித் அசலங்கா ஆட்டமிழந்துள்ளார். அடுத்த பந்திலேயே துஷான் ஹேமந்தாவை கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் விக்கெட்டிற்கு முயற்சித்து பலனில்லை.

அதன் பிறகு 12ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் துஷ்மந்தா சமீரா விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 14ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ஏஞ்சலோ மேத்யூஸை கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். கடைசியாக 17.6ஆவது ஓவரில் கசுன் ரஜீதாவை ஆட்டமிழக்கச் செய்து இந்தப் போட்டியில் தனது 5ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். ஒரே ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

IND vs SL: ஓபனர்ஸ் 2 பேரும் கோல்டன் டக் அவுட்: உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக மோசமான சாதனை படைத்த இலங்கை!

முதல் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஷமி தனது 2ஆவது போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 7 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தற்போது 5 ஓவர்கள் மட்டுமே வீசி ஒரு மெய்டன் ஓவர் உள்பட 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலமாக உலகக் கோப்பையில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ஷமி 45 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஜாகீர்கான் 44 விக்கெட்டுகளும், ஜவஹல் ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளும், ஜஸ்ப்ரித் பும்ரா 33 விக்கெட்டுகளும், அனில் கும்ப்ளே 31 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை 2ஆவது முறையாக படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஷமி 4/40, 4/16, 5/69 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது 5/54, 4/22 மற்றும் 5/18 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

India vs Sri Lanka: கில், கோலி பொறுப்பான ஆட்டம்; ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியால் இந்தியா ரன்கள் குவிப்பு!

இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 3 முறை ஒரு நாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். அவர் 1990 ஆம் ஆண்டுகளில் 2 முறையும், 1994 ஆம் ஆண்டில் ஒரு முறையும், 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.

click me!