ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் அடுத்த ரெக்கார்டை முறியடித்த கோலி..!

Published : Dec 02, 2020, 07:13 PM IST
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் அடுத்த ரெக்கார்டை முறியடித்த கோலி..!

சுருக்கம்

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அடுத்த ரெக்கார்டையும் தகர்த்துள்ளார் விராட் கோலி.  

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். கோலியின் கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த கோலி 63 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் 33 ரன்கள் அடித்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 242வது போட்டியில் 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் கோலி. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 12000 ரன்களை விரைவில் எட்டிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

சச்சின் டெண்டுல்கர் அவரது 300வது ஒருநாள் போட்டியில் 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், அந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!