Kohli breaks Sachin record: ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த விராட் கோலி

Published : Feb 06, 2022, 09:41 PM IST
Kohli breaks Sachin record: ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த விராட் கோலி

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 8 ரன்களே அடித்த விராட் கோலி, ஆனாலும் அந்த 8 ரன் அடித்ததில் சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை தகர்த்துள்ளார்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்தியாவின் 1000வது சர்வதேச ஒருநாள் போட்டி. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு சுருண்டது. 

177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதம் (51 பந்தில் 60 ரன்கள்), இஷான் கிஷன் (28), சூர்யகுமார் யாதவ் (34) ஆகியோரின் பங்களிப்பால் எளிதாக இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் விராட் கோலி வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சதமடிக்க முடியாமல் 2 ஆண்டுகளாக திணறிவருகிறார்.

எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் விராட் கோலி.

ஆனால் அதிலும் ஒரு சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இந்த 8 ரன்னுடன் சேர்த்து, இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2ம் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் 5000 ரன்களை அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக் காலிஸ் ஆகிய மூவருக்கு அடுத்து 4ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.

1. சச்சின் டெண்டுல்கர் (6976 ரன்கள் - இந்தியாவில்)
2. ரிக்கி பாண்டிங் (5521 ரன்கள் - ஆஸ்திரேலியாவில்)
3. ஜாக் காலிஸ் (5186 ரன்கள்  - தென்னாப்பிரிக்காவில்)
4. விராட் கோலி (5002* ரன்கள் - இந்தியாவில்)

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருநாட்டில் 5000 ரன்களை விரைவில் குவித்ததில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார் கோலி. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடிக்க 121 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். ஆனால் விராட் கோலி வெறும் 96 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!