Justin Langer: சீனியர் வீரர்களின் ஆதரவு சுத்தமா இல்ல.! ஜஸ்டின் லாங்கரின் ராஜினாமா கடித விவரம்

Published : Feb 06, 2022, 07:48 PM IST
Justin Langer: சீனியர் வீரர்களின் ஆதரவு சுத்தமா இல்ல.! ஜஸ்டின் லாங்கரின் ராஜினாமா கடித விவரம்

சுருக்கம்

சீனியர் வீரர்களின் ஆதரவு தனக்கு இல்லை என்று ராஜினாமா கடிதத்தில் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.  

2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. அந்த பிரச்னையால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேரன் லீமன் விலகிய பின்னர், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார் ஜஸ்டின் லாங்கர்.

மிகவும் நெருக்கடியான நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஜஸ்டின் லாங்கர்,   2 புதிய கேப்டன்களின் கீழ் ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் அணிகளை கட்டமைத்து அந்த அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 

ஜஸ்டின் லாங்கர் பயிற்சியின் கீழ் ஆரோன் ஃபின்ச் தலைமையில் வெள்ளைப்பந்து அணிகளும், டிம் பெய்ன் தலைமையில் டெஸ்ட் அணியும் சிறப்பாக செயல்பட்டது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2 முறை டெஸ்ட் தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதுமட்டும்தான் ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வாங்கிய மரண அடி.

ஆனாலும் அந்த தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து, டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்றது. 

ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் 2 மிகப்பெரிய தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்தபின்னர், நீண்டகாலத்திற்கு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறைந்த காலத்திற்கே நீட்டிக்க தீர்மானித்தது. அதனால் அதிருப்தியடைந்த ஜஸ்டின் லாங்கர், திடீரென பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜஸ்டின் லாங்கர் விவகாரத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கையாண்ட விதத்தை ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

ஜஸ்டின் லாங்கர் விவகாரத்தில் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆதரவு அளிக்காததும் விமர்சனத்துக்குள்ளானது. பாட் கம்மின்ஸை மிட்செல் ஜான்சன் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா கடிதத்தில் எழுதியிருந்த சாராம்சங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை வரை குறுகிய காலத்திற்கு எனது பயிற்சியாளர் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆஃபர் கொடுக்கப்பட்டது.  ஆனால் அதை ஏற்க நான் விரும்பவில்லை. அனைவரின் விருப்பப்படி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய அத்தியாயம் தொடங்கட்டும். சீனியர் வீரர்கள் பலர் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் இருவரின் ஆதரவு எனக்கில்லை என்று தெரியவந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணிக்க விரும்பும் பாதையில் வெற்றிகரமாக பயணிக்கட்டும். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவை மதிக்கிறேன் என்று லாங்கர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!