India vs West Indies: ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்த பொல்லார்டு.. வீடியோ

Published : Feb 06, 2022, 05:48 PM IST
India vs West Indies: ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்த பொல்லார்டு.. வீடியோ

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டான கைரன் பொல்லார்டு, ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார்.   

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் மீண்டும் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி இணைந்து ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தரும் சாஹலும் ஸ்பின்னர்களாக ஆடினார்கள். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சாஹல் - சுந்தர் இருவரும் இணைந்து சுருட்டினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிடில் ஓவர்களில் இவர்களது அபாரமான பவுலிங்கால் 176 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட்  இண்டீஸ் அணி.

79 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை, ஜேசன் ஹோல்டரும் ஃபேபியன் ஆலனும் இணைந்து சிறப்பாக ஆடி 8வது விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்ததன் விளைவாகத்தான் அந்த அணி 176 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் பூரனை 18 ரன்னில் வீழ்த்திய சாஹல், அடுத்த பந்திலேயே வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டை டக் அவுட்டாக்கி அனுப்பினார். பொல்லார்டு முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பொல்லார்டு 15வது முறையாக இன்று டக் அவுட்டானார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 15 டக் அவுட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார் பொல்லார்டு. 24 முறை டக் அவுட்டாகியுள்ள கிறிஸ் கெய்ல் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், 15 டக் அவுட்டுகளுடன் பொல்லார்டு 2ம் இடத்தில் உள்ளார்.

பிரயன் லாரா, ஃபில் சிம்மன்ஸ், ட்வைன் ஸ்மித் ஆகிய 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 14 முறை டக் அவுட்டாகியுள்ளனர். அவர்கள் மூவரையும் பின்னுக்குத்தள்ளி விரும்பத்தகாத சாதனை பட்டியலில் பொல்லார்டு 2ம் இடம் பிடித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?