தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 37ஆவது உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலமாக இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 35ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருவரும் அதிரடியாக விளையாடினார்.
பிறந்தநாளில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கிங் கோலி!
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் வேறு, நீங்கள் அடிக்க வேண்டாம், நாங்களே தருகிறோம் என்று எக்ஸ்டிராவாக வைடு+பவுண்டரி கொடுத்தனர். இந்திய அணியின் ஸ்கோரும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ரோகித் சர்மா 24 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 24 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எப்படியாவது சதம் அடிக்க வேண்டும் என்று பொறுமையாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான் பிறந்தநாளில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 67 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் 6ஆவது அரைசதம் அடித்துள்ளார்.
முடி வெட்டிக் கொண்டே நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டியை பார்த்த விராட் கோலி!
பிறந்தநாளன்று ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்தியர்கள்:
சச்சின் டெண்டுல்கர் – 134 ரன்கள் vs ஆஸ்திரேலியா 1998 (25ஆவது பிறந்தநாள்)
வினோத் காம்ப்ளி – 100 ரன்கள் vs இங்கிலாந்து 1993 (21 ஆவது பிறந்தநாள்)
என் சித்து 65 நாட் அவுட் vs வெஸ்ட் இண்டீஸ் 1994 (31 ஆவது பிறந்தநாள்)
இஷான் கிஷான் 59 vs இலங்கை 2021 (23ஆவது பிறந்தநாள்)
யூசுப் பதான் 50 நாட் அவுட் vs இங்கிலாந்து 2008 (26ஆவது பிறந்தநாள்)
விராட் கோலி 50 நாட் அவுட் vs தென் ஆப்பிரிக்கா 2023 (35ஆவது பிறந்தநாள்)
தற்போது வரையில் இந்திய அணி 32 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், விராட் கோலி 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இதே போன்று இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த வாழ்க்கையிலும் அதற்கு அப்பாலும் முடிவில்லாமல் நான் உன்னை நேசிக்கிறேன் – அனுஷ்கா சர்மா!
இந்த உலகக் கோப்பை போட்டியிலும் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலி 2ஆவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ் விளையாடி 145 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.