
இந்தியா வந்த இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், டி20 போட்டிகளில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இவர்கள் ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றிருந்தனர். இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி மொத்தமாக (113, 4, 166*) 283 ரன்கள் எடுத்திருந்தார். அதுமட்டுமின்றி ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் கைப்பற்றினார். ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 6ஆவது இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறி 4ஆவது இடம் பிடித்துள்ளார். ஆனால், ரோகித் சர்மா 8ஆவது இடத்திலிருந்து சரிவடைந்து 10ஆவது இடத்திற்கு சென்றுள்ளார்.முதல் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் இருக்கிறார். 2ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ஸி வாண்டர்டுசன் இருக்கிறார். 3ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சுப்மன் கில்: 6ஆவது அரைசதம் அடித்து அசத்தல்!
பந்து வீச்சில் 2 விக்கெட், 3 விக்கெட், 4 விக்கெட் என்று மொத்தமாக 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி ஐசிசி பௌலிங் தரவரிசை பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் இருக்கிறார். 2ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹசல்வுட் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டியில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 3ஆவது இடம் பிடித்துள்ளார்.
2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!