தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி விளாசி தான் ஃபார்முக்கு திரும்பியதாக சொல்லாமல் சொல்லியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி தற்போது பார்படாஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதனபடி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் மார்கோ யான்சென் முதல் ஓவரை வீசினார். இதில், முதல் ஓவரில் மட்டும் விராட் கோலி 3 பவுண்டரி விளாசி தான் ஃபார்முக்கு திரும்பியதை சொல்லாமல் சொல்லியுள்ளார். இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் விராட் கோலி மொத்தமாக 75 (1, 4, 0, 24, 37, 0) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்திருந்தார்.
விராட் கோலி ஃபார்முக்கு திரும்பிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 ஆவது பந்திலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். தற்போது வரையில் இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது. கேசவ் மகாராஜ் போட்டியின் 2ஆவது ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.