Latest Videos

IND vs SA T20 WC 2024: முதல் முறையாக டிராபியை வெல்லும் கேப்டன் யார்? டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

By Rsiva kumarFirst Published Jun 29, 2024, 7:49 PM IST
Highlights

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. ஒவ்வொருவரது எண்ணமே இந்தியா தான் டிராபியை வெல்ல வேண்டும். இதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பூஜை, வழிபாடு செய்து வருகின்றனர். பார்படாஸில் மழை பெய்ய 30 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்றுடன் முடியும் நிலையில், டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று ராகுல் டிராவிட்டிற்கு நினைவு பரிசாக இந்திய அணி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தொடர்ந்து சொதப்பி வந்த விராட் கோலி மட்டும் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்போம் என்று டாஸ் நிகழ்வின் போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

தென் ஆப்பிரிக்கா:

குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேசவ் மகராஜ், கஜிசோ ரபாடா, ஆன்ரிட்ச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.

இதற்கு முன்னதாக பார்படோஸில் நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா இந்த மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த தொடரில் இரு அணிகளும் விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டி வரை வந்துள்ளன.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 டி20 போட்டிகளில் இந்தியா 14 போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்று வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுவரையில் பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற 50 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 போட்டியிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்கள் மட்டுமே ஆகும். அதோடு சராசரி 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 125 ரன்கள் மட்டுமே ஆகும்.

மேலும், அதிகபட்ச ஸ்கோர் 224/5 ஆகும். குறைந்தபட்ச ஸ்கோர் 43/10 ஆகும். சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 172/6 ரன்கள் ஆகும். அதோடு 106/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணியும் உண்டு.

click me!