கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் டிராபியை வென்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கேப்டன்களின் பட்டியலில் இணைவதற்கு ரோகித் சர்மா மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் போட்டி போடுகின்றன. இதுவரையில் நடைபெற்ற 8 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் எம்.எஸ்.தோனி முதல் ஜோஸ் பட்லர் வரையில் 6 கேப்டன்கள் டிராபியை கைப்பற்றியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபிய கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டேரன் சமி மட்டுமே டி20 உலகக் கோப்பை தொடரை 2 முறை கைப்பற்றியுள்ளார். இவர்கள் தவிர இங்கிலாந்தைச் சேர்ந்த பால் கோலிங்வுட், இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்கா, பாகிஸ்தானைச் சேர்ந்த யூனிஸ் கான் ஆகியோர் அணிக்கு டிராபியை வென்று கொடுத்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோன் பிஞ்ச் மற்றும் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் ஆகியோர் அணிக்கு டிராபியை வென்று கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோர் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை டிராபியை வெல்வதற்கான போட்டியில் விளையாடுகின்றனர்.