அண்டர்19 உலகக் கோப்பை முதல் எஸ்ஏ20 , டி20 உலகக் கோப்பை அரையிறுதி வரையில் கேப்டன் எய்டன் மார்க்ரம் சாதனைகள்!

Published : Jun 29, 2024, 05:28 PM IST
அண்டர்19 உலகக் கோப்பை முதல் எஸ்ஏ20 , டி20 உலகக் கோப்பை அரையிறுதி வரையில் கேப்டன் எய்டன் மார்க்ரம் சாதனைகள்!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனான எய்டன் மார்க்ரம் அண்டர்19 உலகக் கோப்பை தொடரை முதல் முறையாக ஒரு கேப்டனாக கைப்பற்றினார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பார்படோஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், முதலில் டாஸ் வெல்லும் அணியானது பேட்டிங் தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால், இதற்கு முன்னதாக பார்படோஸில் நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா இந்த மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த தொடரில் இரு அணிகளும் விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டி வரை வந்துள்ளன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 டி20 போட்டிகளில் இந்தியா 14 போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்று வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுவரையில் பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற 50 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 போட்டியிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்கள் மட்டுமே ஆகும். அதோடு சராசரி 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 125 ரன்கள் மட்டுமே ஆகும்.

மேலும், அதிகபட்ச ஸ்கோர் 224/5 ஆகும். குறைந்தபட்ச ஸ்கோர் 43/10 ஆகும். சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 172/6 ரன்கள் ஆகும். அதோடு 106/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணியும் உண்டு. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக வெற்றிகளை குவித்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரமிற்கு இறுதிப் போட்டி ஒன்றும் புதிதல்ல. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்19 உலகக் கோப்பை தொடரை வென்று கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டைட்டில் வென்று கொடுத்துள்ளார்.

ஆனால், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடியிருந்தார். இந்த தொடரில் ஹைதராபாத் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. இந்த நிலையில் தான் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணியானது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

எய்டன் மார்க்ரம் மட்டுமே அண்டர்19 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இதில், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 2 போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 8 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் சாதனையை தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!