கொரோனாவை எதிர்கொள்ள கோலி - அனுஷ்கா தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி

Published : May 07, 2021, 02:55 PM IST
கொரோனாவை எதிர்கொள்ள கோலி - அனுஷ்கா தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா 2ம் அலையை எதிர்கொள்ள விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி ரூ.2 கோடியை நிதியுதவி செய்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் 14வது சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பாட் கம்மின்ஸ், பிரெட் லீ ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உட்பட இந்திய வீரர்கள் சிலரும் கொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி, கொரோனாவிற்கு நிதியுதவி செய்ய நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட நிலையில், இதுவரை திரட்டிய ரூ.2 கோடியை வழங்கியுள்ளனர்.

ஐபிஎல் ரத்தானதால் மும்பையில் உள்ள வீட்டிற்கு திரும்பிய விராட் கோலி, ஓய்வெடுக்காமல் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா முதல் அலையின் போது கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி ரூ.3 கோடியை நிதியுதவி செய்த நிலையில், 2ம் அலை காலத்தில் ரூ.7 கோடி நிதி திரட்ட இலக்கு வைத்து, அதில் ரூ.2 கோடியை திரட்டி கொடுத்திருக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!