IPL 2021 கோலி - படிக்கல் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆர்சிபி..!

Published : Sep 24, 2021, 08:55 PM IST
IPL 2021 கோலி - படிக்கல் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆர்சிபி..!

சுருக்கம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து, ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபியும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

கேகேஆருக்கு எதிரான போட்டியில் படுமோசமாக பேட்டிங் ஆடி வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆர்சிபி அணி, இந்த போட்டியில் ஷார்ஜாவின் சிறிய மைதானத்தை சரியாக பயன்படுத்தி பெரிய ஸ்கோரை அடிக்கும் முனைப்பில் களமிறங்கியது.

அதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தது ஆர்சிபி அணியின் தொடக்க ஜோடி. விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இருவரும் இணைந்து சிஎஸ்கே அணியின் பவுலிங்கை அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். படிக்கல் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து  கோலியும் அரைசதம் அடித்தார்.

11வது ஓவரில் 100 ரன்களை ஆர்சிபி எட்டிய நிலையில், பிராவோவின் பந்தில் 53 பந்தில் ஆட்டமிழந்தார் கோலி. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 111 ரன்களை குவித்தனர். கோலியின் விக்கெட்டுக்கு பிறகு, படிக்கல்லுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். நல்ல தொடக்கம் கிடைத்ததால், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டிம் டேவிட் ஆகிய பவர் ஹிட்டர்கள் இருப்பதால், ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை அடிப்பது உறுதி.
 

PREV
click me!

Recommended Stories

U19 உலகக்கோப்பையில் சதம் விளாசிய விஹான் மல்ஹோத்ரா.. திணறும் ஜிம்பாபே
U19 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேயை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி