IPL 2021 கடுப்பாக்கிய பிரசித் கிருஷ்ணாவை திட்டிய பொல்லார்டு..! வீடியோ

Published : Sep 24, 2021, 06:43 PM IST
IPL 2021 கடுப்பாக்கிய பிரசித் கிருஷ்ணாவை திட்டிய பொல்லார்டு..! வீடியோ

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்டை சீண்டி கடுப்பேற்றினார் பிரசித் கிருஷ்ணா. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

ஐபிஎல் 14வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கேகேஆர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான, வலுவான மும்பை இந்தியன்ஸ் அணி மீது பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் அணியை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி. 

ரோஹித், டி காக், சூர்யகுமார், இஷான் கிஷன், பொல்லார்டு என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை அணியை 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, அந்த இலக்கை 15 ஓவர்களிலேயே அடித்து அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி.

இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்டிங்கின்போது பிரசித் கிருஷ்ணா 15வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை பொல்லார்டு நேராக அடிக்க, அதை பிடித்து ஸ்டம்ப்புக்கு நேராக எறிவதை போல செய்கை காட்ட விரும்பிய பிரசித் கிருஷ்ணா, அந்த பந்தை பிடிக்காமல் விட்டுவிட்டார். ஆனாலும் கையை உயர்த்தியபடியே, பொல்லார்டை நோக்கி சில அடிகள் நகர்ந்து சென்று சீண்டினார். பிரசித் கிருஷ்ணாவின் செயல்பாட்டால் கடுப்பான பொல்லார்டு, ஓவருக்கு பின் அவரிடம் கோபமாக ஏதோ சொல்லிவிட்டுச்சென்றார். ஆனால் பிரசித் கிருஷ்ணாவோ, கூலாக தொப்பியை மாட்டிக்கொண்டு சென்றார். 

பொல்லார்டை சீண்டிவிடும் அவரது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் கூலாக சென்றார் பிரசித் கிருஷ்ணா. அவர் எதிர்பார்த்ததும் அதுதான். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?