IPL 2021 நான் கேப்டனா இருந்தபோது அந்த பையனை 3ம் வரிசையில் இறக்காம தப்பு பண்ணிட்டேன்..! கௌதம் கம்பீர் வருத்தம்

By karthikeyan VFirst Published Sep 24, 2021, 4:32 PM IST
Highlights

தான் கேப்டனாக இருந்தபோது, தனது கேப்டன்சியில் கேகேஆர் அணியில் ஆடிய சூர்யகுமார் யாதவை 3ம் வரிசையில் இறக்காததற்காக வருத்தப்படுவதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் கௌதம் கம்பீர். தனது கேப்டன்சியில் கேகேஆர் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கோப்பையை வென்று கொடுத்தார் கம்பீர்.

ரோஹித் சர்மா(5) மற்றும் தோனி(3) ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் கம்பீர்(2) ஆவார். கம்பீரின் கேப்டன்சியில் கேகேஆர் அணி சிறப்பாக செயல்பட்டது.

இந்தியா உருவாக்கிய சிறந்த கேப்டன்களில் ஒருவர் கம்பீர். களவியூகம், ஆக்ரோஷமான அணுகுமுறை, வீரர்களின் திறமையறிந்து வாய்ப்பளித்தல், வீரர்களை கையாளும் விதம் என அனைத்து விதத்திலும் சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர். ஆனால் அவரது சமகாலத்தில் தோனி ஆடியதால், இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கம்பீருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், தனது கேப்டன்சியில் தான் செய்த ஒரு தவறுக்காக இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர். இந்தியாவின் 360 என அழைக்கப்படும், மிகச்சிறந்த பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கம்பீரின் கேப்டன்சியில் கேகேஆர் அணியில் 2014லிருந்து 2017வரை ஆடினார். 

இதையும் படிங்க - 

அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் உள்நாட்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு, டி20 உலக கோப்பைக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இதையும் படிங்க - 

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன்சியில் கேகேஆர் அணியில் ஆடிய காலத்தில் அவரை 3ம் வரிசையில் இறக்காததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் கம்பீர். சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனில் போதிய வாய்ப்பளித்தார் கம்பீர். ஆனால் யூசுஃப் பதான், மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களும் அணியில் இருந்ததால், சூர்யகுமாருக்கு 3ம் வரிசையில் இறங்கும் வாய்ப்பளிக்க அவரால் முடியவில்லை. இந்நிலையில் அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் கம்பீர். 

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், சூர்யகுமார் யாதவை 3ம் வரிசையில் இறக்காததற்காக நான் வருந்துகிறேன். மனீஷ் பாண்டே, யூசுஃப் பதான் ஆகிய வீரர்கள் இருந்ததால், சூர்யகுமாரை ஃபினிஷராக மட்டுமே பயன்படுத்தினோம். நிறைய வீரர்கள் ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாறியுள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் கேகேஆரை விட்டு வெளியேறியது கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய இழப்பு. சூர்யகுமார் யாதவ் கேகேஆரை விட்டு வெளியேற அனுமதித்திருக்கக்கூடாது.

நாங்கள் சூர்யகுமார் யாதவை 3ம் வரிசையில் இறக்காததால் தான் அவரால் ஒரு சீசனில் 400-500 ரன்கள் அடிக்க முடியவில்லை என்றார் கம்பீர்.
 

click me!