மும்பையில் உள்ள தங்களது வீட்டில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதைத் தொடர்ந்து நடிகை சமந்தா மற்றும் கரீஷ்மா கபூர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 17 ஆம் தேதி நடந்தது. இதில், இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய வீரர்கள் மும்பை திரும்பினர்.
CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!
இந்த நிலையில் தான் தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நடந்தது. ஆனால், வடமாநிலங்களில் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. இதில், ஆசிய கோப்பையை கைப்பற்றி மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றியோடு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளனர்.
அந்த வகையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் மும்பையில் உள்ள தங்களது வீட்டில் விநாயகர் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடினர். இதற்கு நடிகைகள் சமந்தா மற்றும் கரீஷ்மா கபூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மொஹாலியில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியொரு முன்னேற்றமா? எல்லாம் ஆசிய கோப்பை ஃபைனல் செய்த வேலை: நம்பர் 1 இடத்தில் முகமது சிராஜ்!