விராட் கோலி தனது மகள் வாமிகா உடன் லண்டன் ரெஸ்டாரண்டில் தனியாக அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. தனிப்பட்ட குடும்ப சூழல் காரணமாக இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது. அதன்பிறகு எஞ்சிய 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு சம்பளத்துடன் போனஸையும் கொடுக்க முடிவு செய்த பிசிசிஐ!
இதில், விராட் கோலி இடம் பெறவில்லை. அப்போதும் குடும்ப சூழல் காரணமாக இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த 15 ஆம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர். இதன் காரணமாகத்தான் விராட் கோலி டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை என்று ஒவ்வொரும் அறிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.
Shami Surgery: அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி – மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல்!
இந்த நிலையில் தான் விராட் கோலி தனது மகள் வாமிகா உடன் லண்டனில் உள்ள ரெஸ்டாரண்டிற்கு சென்றிருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வாமிகா பிறந்தாள். தற்போது 3 வயது எட்டிய வாமிகாவிற்கு அகாய் என்று தம்பி பிறந்துள்ளான்.
IPL 2024, RCB: ஐபிஎல் 17 ஆவது சீசன் டிராபியை ஆர்சிபி வெல்ல வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முற்றிலும் தவிர்த்த விராட் கோலி, வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியிலேயே சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.