விஜய் ஹசாரே டிராபி: காலிறுதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம் அணிகள் வெற்றி..! அரையிறுதி போட்டி விவரம்

By karthikeyan VFirst Published Nov 28, 2022, 7:24 PM IST
Highlights

விஜய் ஹசாரே காலிறுதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா, அசாம் ஆகிய 4 அணிகளும் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி போட்டிகள் இன்று நடந்தன. தமிழ்நாடு அணி சௌராஷ்டிராவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.

கர்நாடகா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார். அபிஷேக் சர்மா 109 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 235 ரன்கள் அடித்தது பஞ்சாப் அணி. 236 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர் ரவிகுமர் சமர்த் 71 ரன்கள் அடித்தார். மனீஷ் பாண்டே (35), ஷ்ரேயாஸ் கோபால்(42) ஆகிய வீரர்கள் பங்களிப்பு செய்ய, கடைசி ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் பாண்டியா, ரிஷப், ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான்..! அடித்துக்கூறும் கம்பீர்

மகாராஷ்டிரா - உத்தர பிரதேசம் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 220 ரன்களை குவிக்க, மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 330 ரன்களை குவித்தது. 331 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய உத்தர பிரதேச அணியை 272 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது மகாராஷ்டிரா அணி.

அசாம் - ஜம்மு காஷ்மீர் இடையேயான போட்டியில் அசாம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

ருதுராஜ் கெய்க்வாட் இரட்டை சதம்.. ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை (42 ரன்கள்) விளாசி வரலாற்று சாதனை

கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா மற்றும் அசாம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நவம்பர் 30ம் தேதி அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், அசாம் - மகாராஷ்டிரா அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஏ மற்றும் பி மைதானங்களில் இந்த போட்டிகள் நடக்கின்றன.
 

click me!