விஜய் ஹசாரே காலிறுதி போட்டியில் சொதப்பல் ஆட்டம்.. சௌராஷ்டிராவிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது தமிழ்நாடு அணி

By karthikeyan VFirst Published Nov 28, 2022, 6:05 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் சௌராஷ்டிராவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது தமிழ்நாடு அணி.
 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு அணி காலிறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

தமிழ்நாடு அணி:

சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர், எம் முகமது, சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர்.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் பாண்டியா, ரிஷப், ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான்..! அடித்துக்கூறும் கம்பீர்

முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணியின் சீனியர் வீரர் ஷெல்டான் ஜாக்சன் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 62 ரன்களுக்கு ஹர்விக் ஆட்டமிழந்தார். ஜெய் ஜோஹில் (34) மற்றும் சமர்த் வியாஸ் (27) ஆகிய இருவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். பின்னர் ஆர்பிள் வசவடா (51) மற்றும் சிராக் ஜானி (52) ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, 50 ஓவரில் சௌராஷ்டிரா அணி 293 ரன்களை குவித்தது.

294 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் (8) மற்றும் சாய் சுதர்சன் (24) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்த தொடரின் தொடக்கத்திலிருந்து அபாரமாக ஆடி ஒரு இரட்டை சதம் உட்பட தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி வரலாற்று சாதனை படைத்த நாராயண் ஜெகதீசனும், அவருடன் இணைந்து இந்த தொடர் முழுக்க சதங்களை விளாசி அசத்திய சாய் சுதர்சனும் முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் சொதப்பினர்.

ருதுராஜ் கெய்க்வாட் இரட்டை சதம்.. ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை (42 ரன்கள்) விளாசி வரலாற்று சாதனை

பாபா அபரஜித்தும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாபா இந்திரஜித் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஆனால் பாபா இந்திரஜித் 53 ரன்களுக்கும், சாய் கிஷோர் 74 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 48 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தொடரைவிட்டு வெளியேறியது தமிழ்நாடு அணி.
 

click me!