கிரிக்கெட்டில் அடுத்த லெவலுக்கு செல்லும் வைபவ் சூர்யவன்ஷி... இனி டி20-ல் அபிஷேக் ஷர்மாவுக்கு பதில் இவரா?

Published : Mar 27, 2026, 03:09 PM IST
வைபவ் சூர்யவன்ஷி

சுருக்கம்

இளம் வீரர்களின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாக்க ஐசிசி இந்த விதியைக் கொண்டுவந்தது. இன்று 15 வயதை நிறைவு செய்துள்ள வைபவ், எப்போது இந்திய ஜெர்சியில் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இனி சர்வதேச கிரிக்கெட்டின் பெரிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கலாம். வைபவ் தனது 15-வது பிறந்தநாளைக் கொண்டாடியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான ஐசிசி-யின் குறைந்தபட்ச வயது வரம்பை எட்டியுள்ளார். இதன்மூலம், ஐபிஎல் 19-வது சீசனுக்கு முன்பாகவே, இந்திய சீனியர் அணித் தேர்வுக்கு வைபவ் தகுதி பெற்றுவிட்டார்.

2020-ல் ஐசிசி கொண்டுவந்த விதிமுறை (Article 4.1) படி, ஒரு வீரர் தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளிலோ அல்லது ஐசிசி தொடர்களிலோ விளையாட வேண்டுமென்றால், அவருக்குக் குறைந்தபட்சம் 15 வயது நிறைந்திருக்க வேண்டும். இளம் வீரர்களின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாப்பதற்காகவே இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இன்று 15 வயதை நிறைவு செய்துள்ள வைபவ், எப்போது இந்திய ஜெர்சியில் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்திய அணியில் களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி

2025 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வைபவை 1.1 கோடி ரூபாய்க்கு வாங்கியபோதுதான் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயது வீரர் என்ற சாதனையுடன் அணிக்குள் வந்த வைபவ், தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மாஸ் காட்டினார். அதைத் தொடர்ந்து, வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் அடித்த சதம்தான் ஐபிஎல்-ன் அதிவேக சதமாக உள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் U-19 கிரிக்கெட்டில் ஏற்கெனவே தனது திறமையை நிரூபித்தவர் வைபவ். இந்திய U-19 யூத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்து, யூத் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிவேக சதம் என்ற சாதனையை அவர் வசப்படுத்தினார். ஜனவரியில் நடந்த U-19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது, அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் வைபவ் ஜொலித்தார். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையையும் தட்டிச் சென்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக்கின் ஹார்ட்-வின்னிங் மொமண்ட்..! வான்கடே ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் கொடுத்த பாண்டியா..!
IPL 2026: இரண்டாம் கட்ட அட்டவணை வெளியீடு..! மீண்டும் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா..!