
IPL 2026 சீசன் தொடங்க இன்னும் கொஞ்ச நாள்தான் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இப்போ சோஷியல் மீடியாவுல செம ஹாட் டாபிக். ஒரு பக்கம், IPL வரலாற்றிலேயே 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க கோலிக்கு இன்னும் சில ரன்களே தேவை. இன்னொரு பக்கம், RCB நிர்வாகத்திடம் கோலி சில பெரிய கோரிக்கைகளை வைத்திருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
என்ன அந்த வதந்தி?
கடந்த சில நாட்களாக, கோலியைப் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, ஐபிஎல் தொடரின்போது போட்டிகளுக்கு இடையில் 3 நாட்கள் ஓய்வு கிடைத்தால், லண்டனுக்குச் சென்று வர வேண்டும் என்றும், அதற்காக இந்தியா-லண்டன் இடையே பயணிக்க தனக்கு ஒரு தனி விமானம் (Chartered Flight) ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோலி RCB நிர்வாகத்திடம் நிபந்தனை விதித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
சிரித்துக்கொண்டே பதிலடி
இந்த வதந்திக்கு கோலியே அமைதியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த வதந்தி செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, கூடவே இரண்டு சிரிக்கும் எமோஜிக்களை மட்டும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், 'இந்த செய்தியெல்லாம் சுத்தப் பொய்' என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் கோலி.
மார்ச் 28-ல் முதல் போட்டி
வரும் மார்ச் 28 அன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக RCB தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. கடந்த சீசனில், 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கோலி, இந்த முறையும் பேட்டிங்கில் பல மைல்கற்களை எட்டத் தயாராகி வருகிறார். விராட் கோலி கடந்த வாரம்தான் RCB அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். அவர் பயிற்சி செய்யும் வீடியோக்களும், மற்ற வீரர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.