இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 61 ரன்கள் எடுத்தார். டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஆலி போப் 31 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஜோ ரூட் தனது 30 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மொயீன் அலி 18, ஸ்டூவர் பிராட் 16 ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது. இதில், டேவிட் வார்னர் மற்றும் உஸ்மா கவாஜா விக்கெட்டை இழக்காமல் முதல் நாள் முடிவில் 14 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 16 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து தடுமாறியது.
உலகக் கோப்பைக்கான 10ஆவது அணி எது? தகுதிச் சுற்றில் 32 போட்டிகள்: நாளை முதல் ஆரம்பம்!
அதன் பிறகு, உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீனும் 38 ரன்களில் வெளியேறினார். ஒரு புறம் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்த வங்கதேச வீரர் நஜ்முல் ஷாண்டோ வரலாற்று சாதனை!
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் ஆஸ்திரேலிய வீரராக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் விளாசியுள்ளார். அதே போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 7 சதம் விளாசி கவாஜா முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 126 ரன்னுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.
வரலாற்றில் சிறப்பான கேட்ச்: பறந்து பிடித்த இங்கிலாந்து வீரர் பிராட்லி ஹர்ரி: குவியும் பாராட்டுக்கள்!