டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, தொடக்க வீராங்கனை கிரன் நவ்கிரே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் அலீசா ஹீலி 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தஹிலா மெஹ்ராத் 3, கிரேஸ் ஹாரிஸ் 14, ஷ்வேதா ஷெராவத் 4, பூனம் கேம்னர் 1, ஷோஃபி எக்லெஸ்டோன் 8 என்று வரிசையாக ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தீப்தி சர்மா மட்டுமே கடைசி வரை விளையாடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் டைடஸ் சாது மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷிகா பாண்டே, அருந்ததி ராய், ஜெஸ் ஜோனாசென் மற்றும் அலீஸ் கேப்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
யுபி வாரியர்ஸ்:
அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), கிரன் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், ஷ்வேதா ஷெராவத், தீப்தி சர்மா, பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாக்கூர், கோகெர் சுல்தானா, தஹிலா மெக்ராத்.
டெல்லி கேபிடல்ஸ்:
மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, அலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னபெல் சுதர்லெண்ட், ஜெஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், தனியா பாட்டீயா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, டைட்டஸ் சாது