ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.
இதையடுத்து 17ஆவது சீசனுக்காக ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் அதிக தொகை கொடுத்து வீரர்களை ஏலம் எடுத்தனர். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
மேலும், ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டது. கேப்டன்கள், பயிற்சியாளர்கள் என்று மாற்றங்கள் செய்யப்பட்டது. வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க உள்ள நிலையில் அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வைரலானது.
இந்த நிலையில் தான், ஐபிஎல் தீம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒவ்வொரு அணியின் பெயரும் இடம் பெற்று கடைசியாக டாடா ஐபிஎல் என்று டிராபியுடன் குறிப்பிடப்படுகிறது. மேலும் மார்ச் 22 ஆம் தேதி என்று அறிவிக்கப்படுகிறது. அதோடு அந்த வீடியோ முடிகிறது. வரும் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sound 🔛
It's THAT time of the year 😉 starts 22nd March onwards 🗓️ pic.twitter.com/018q7jxlcT