WPL 2024, UPW vs DCW:தட்டு தடுமாறி 119 ரன்கள் எடுத்த யுபி வாரியர்ஸ் – டெல்லியில் 4 விக்கெட் அள்ளிய ராதா யாதவ்!

By Rsiva kumar  |  First Published Feb 26, 2024, 9:45 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தொடங்கப்பட்டு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டி முதலே சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.

இதையடுத்து நேற்று நடந்த 3ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அலீசா ஹீலி பவுலிங் தேர்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

அதன்படி யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனை விருந்தா தினேஷ் ரன் ஏதும் எடுக்காமல் மரிசான்னே காப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தஹிலா மெக்ராத் ஒரு ரன்னில் மரிசான்னே காப் பந்தில் கிளீன் போல்டானார். கேப்டன் அலீசா ஹீலி 13 ரன்களில் ஆட்டமிழக்க, கிரேஸ் ஹாரிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த ஸ்வேதா ஷெராவத் மட்டுமே அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மரிசான்னே காப் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

 

டெல்லி கேபிடல்ஸ்

மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, அலீஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான்னே காப், அன்னாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ஷிகா பாண்டே.

யுபி வாரியர்ஸ்:

அலிசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விருந்தா தினேஷ், தஹிலா மெகராத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, ஷோஃபி எக்லெஸ்டான், தீப்தி சர்மா, ஸ்வேதா ஷெராவத், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் கேம்நர், கோஹர் சுல்தானா.

click me!