யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அலீசா ஹீலி பவுலிங் தேர்வு செய்தார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தொடங்கப்பட்டு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டி முதலே சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
இதையடுத்து நேற்று நடந்த 3ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அலீசா ஹீலி பவுலிங் தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் 2 ஆஸ்திரேலியா வீராங்கனைகள் தலைமையிலான அணி விளையாடுகிறது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேரு மோதிய 2 போட்டிகளிலும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியானது கடைசி பந்தில் வெற்றியை கோட்டைவிட்டது.
இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைமா தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கோஹர் சுல்தானா அணியில் இடம் பெற்றுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ்
மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, அலீஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான்னே காப், அன்னாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ஷிகா பாண்டே.
யுபி வாரியர்ஸ்:
அலிசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விருந்தா தினேஷ், தஹிலா மெகராத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, ஷோஃபி எக்லெஸ்டான், தீப்தி சர்மா, ஸ்வேதா ஷெராவத், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் கேம்நர், கோஹர் சுல்தானா.