Reliance 1 vs BPCL: டிஒய் பாட்டீல் டி20 டிராபி 2024 – 3 ஓவர் 2 விக்கெட் தட்டி தூக்கிய ஹர்திக் பாண்டியா!

By Rsiva kumarFirst Published Feb 26, 2024, 6:12 PM IST
Highlights

டிஒய் பாட்டீல் டி20 டிராபி தொடரின் 18ஆவது சீசனின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான ரிலையன்ஸ் 1 அணியானது 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிஒய் பாட்டீல் டி20 டிராபி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டநிலையில் தற்போது 18ஆவது சீசன் சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த தொடரில் 16 அணிகள் குரூப் ஏ,பி,சி,டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.

ரிலையன்ஸ், பிபிசிஎல், சென்ட்ரல் ரயில்வே, ஜெயின் இர்ரிகேசன், ஆர்பிஐ, டிஒய் பாட்டீல் புளூ, ரூட் மொபைல், டாடா எஸ்சி, கனரா பேங்க, டிஒய் பாட்டீல் ரெட், பேங்க் ஆப் பரோடா, இன்கம் டாக்ஸ், சிஎஜி, இந்தியன் ஆயில், நிர்லான் எஸ்சி, மும்பை கஸ்டம்ஸ் என்று மொத்தமாக 16 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

Latest Videos

இந்த தொடரில் ரிலையன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாக செயல்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் போது காயம் ஏற்பட்ட நிலையில் தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா தற்போது டிஒய் பாட்டீல் டி20 தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் ரிலையன்ஸ் 1 மற்றும் பிபிசிஎல் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பிபிசிஎல் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரிலையன்ஸ் அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பியூஸ் சாவ்லா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் வந்த ரிலையன்ஸ் அணியானது, 14.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் இடம் பெற்று விளையாடுகின்றனர்.

click me!