#BBL இதுவே அவுட் இல்லைனா வேற எதுதான் அவுட்டு..? பிக்பேஷ் லீக்கில் தொடரும் அம்பயர்களின் அட்டூழியங்கள்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 31, 2021, 7:09 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரில் அம்பயர்களின் தவறான முடிவுகள் தொடர்ந்துவருகின்றன.
 

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்று, நாக் அவுட் ஆகிய போட்டிகளில் அம்பயர்கள் ரொம்ப க்ளோசாகக்கூட இல்லாத, சாதாரண முடிவுகளையே தவறாக எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் மிட்செல் மார்ஷுக்கு தவறான அவுட் கொடுத்தார் அம்பயர். அம்பயரின் முடிவால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த  மிட்செல் மார்ஷ், அம்பயரை திட்டி அபராதமும் கட்டினார்.

இந்நிலையில், சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையே நடந்த நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர் அணி வீரர் உஸ்மான் கவாஜா 28 ரன்கள் அடித்தார். ஆனால் அவர் பார்ட்லெட் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டியவர். பார்ட்லெட் வீசிய பந்து மிகச்சரியாக லைனில் குத்தி மிடில் ஸ்டம்ப்பை தாக்கியது. அப்பட்டமாக அவுட் தெரிந்த அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. 

Given not out – Usman Khawaja is a lucky man!pic.twitter.com/LLxd3tfN07

— Wisden (@WisdenCricket)

பிக்பேஷ் லீக்கில் டி.ஆர்.எஸ் இல்லாததால் தவறான முடிவுகளை எதிர்த்து வீரர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அது அவுட் என்று தெரிந்தும் கூட, பவுலர் பார்ட்லெட் மற்றும் பவுலிங் அணியான பிரிஸ்பேன் ஹீட் அணியால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிரிஸ்பேன் ஹீட் அணி, சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சேலஞ்சர் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அந்த போட்டியில் வெல்லும் அணி ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்ளும்.
 

click me!