யோவ் பந்து பேட்டுலயே படலையா.. அம்பயரை செம டென்சனா திட்டிய மிட்செல் மார்ஷ் வீடியோ..! $5000 அபராதம்

Published : Jan 31, 2021, 06:27 PM IST
யோவ் பந்து பேட்டுலயே படலையா.. அம்பயரை செம டென்சனா திட்டிய மிட்செல் மார்ஷ் வீடியோ..! $5000 அபராதம்

சுருக்கம்

பிக்பேஷ் லீக்கில் தனக்கு அவுட்டே இல்லாததற்கு அவுட் கொடுத்த அம்பயரை பார்த்து செம கோபமாக கத்திய மிட்செல் மார்ஷுக்கு ஐயாயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

பிக்பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அம்பயர்களின் தவறான முடிவுகள் படுமோசமாக தொடர்ந்து வருகின்றன. சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

அந்த போட்டியில் தோல்வியடைந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, நாக் அவுட்டில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணியை சேலஞ்சர் ரவுண்டில் எதிர்கொள்கிறது. 

தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸுக்கு எதிராக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பேட்டிங் ஆடியபோது மிட்செல் மார்ஷுக்கு 13வது ஓவரில் அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்தார். ஸ்டீவ் ஓ கீஃப் லெக் திசையில் வீசிய பந்தை அப்படியே பின்னால் தட்டிவிட முயன்றார் மிட்செல் மார்ஷ். அந்த பந்து விக்கெட் கீப்பர் ஜோஷ் ஃபிலிப்பின் கையில் சிக்க, அவரும் பவுலரும் இணைந்து அப்பீல் செய்ய அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதை உறுதியாக அறிந்த மிட்செல் மார்ஷ், செம கோபமடைந்து அம்பயரை பார்த்து கண்டபடி கத்திக்கொண்டே களத்தைவிட்டு வெளியேறினார் மிட்செல் மார்ஷ். 

அம்பயரின் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் களத்தில் செமயாக கத்தி வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷுக்கு $5000 அபராதமாக விதிக்கப்பட்டது.

அம்பயரின் தவறான முடிவால் ஏற்பட்ட கோபத்தால், களத்தில் அம்பயரை திட்டிய மிட்செல் மார்ஷ், பின்னர் தனது தவறை உணர்ந்து, இளம் வீரர்களுக்கு தான் தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் அம்பயர்களை தான் மதிப்பதாகவும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார் மிட்செல் மார்ஷ்.
 

PREV
click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!