ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாக்., முன்னாள் ஜாம்பவான் நியமனம்

Published : May 25, 2022, 09:32 PM IST
ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாக்., முன்னாள் ஜாம்பவான் நியமனம்

சுருக்கம்

ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கிரஹாம் தோர்பே நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனான யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போது பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடவுள்ள தொடரிலிருந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பை உமர் குல் ஏற்கவுள்ளார்.

உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 163 விக்கெட்டுகளையும், 130 ஒருநாள் போட்டிகளில் ஆடி 179 விக்கெட்டுகளையும், 60 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் உமர் குல். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஃபாஸ்ட் பவுலரான உமர் குல், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். எனவே பயிற்சியாளர் அனுபவம் பெற்ற ஜாம்பவான் பவுலரான உமர் குல் ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பலம் சேர்க்கும்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!